Tuesday 22 March 2011

அவிழ்தம் சித்த மருத்துவமனை

அவிழ்தம் சித்த மருத்துவமனை 
18.08.2002 அன்று தமிழ் மருத்துவ கழகத்தின் சார்பாக மௌனசாமி மடம் தெரு , அம்பத்தூர் இல் துவங்கப்பட்டது . சித்த மருத்த்வத்தின் அடிப்படையில் நோயினை, நாடி, எண்வகை தேர்வுகளின் மூலம் கணித்து, பாரம்பரியமும் தொன்மையும் வாய்ந்த மருந்துகளை கொண்டு மருத்துவம் மேற்கொள்ளபடுகிறது .
புற மருத்துவ முறைகளான தொக்கணம், வர்மம், யோகம், நவரகிழி, பிழிச்சல், வச்தி மூலமும் மருத்துவம் அளிக்கப்படுகிறது .
இங்கு தோல்நோய்கள், சுவாசகாசம், பீனிசம், மூட்டுவலி, கீல்வாயு, மூலம், குழந்தை இன்மை, மாதவிடாய்  கோளாறுகள், மதுமேகம், குருதியழல் நோய்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறது .